பொங்கல் பரிசு.. அமைச்சர் ஆலோசனை

Update: 2022-12-30 06:24 GMT

பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன்,அமைச்சர் பெரியகருப்பன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார்

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது

பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.1000, பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டம் முறையாக மக்களுக்கு சென்றடைகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது

இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பெரியகருப்பன் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

பொது மக்களுக்கு முறையாக பொங்கல் தொகுப்பு சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும், பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்படுகிறது

Tags:    

மேலும் செய்திகள்