அதிமுக பிரமுகர் கொலை வழக்கு... 2 மாதங்கள் தொடர்ந்த வேட்டை - ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்

Update: 2022-11-07 12:00 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிமுக பிரமுகரை கொலை செய்த வழக்கில் கூலிப்படையை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. ஒன்றிய நிர்வாகி செந்தில்குமார் கடந்த செப்டம்பர் மாதம் மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெ.ஜெ‌. நகர் பகுதியை சேர்ந்த அவரது உறவினர் விஜயலட்சுமி என்ற பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய கூலிப்படையினரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வந்தது. 2 மாதங்களுக்கு பிறகு கொலையாளிகள் சென்னையில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலின் பேரில் 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்