பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என குஜராத் அரசு தெரிவித்துள்ளது.
அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமரின் தாயார் ஹீராபென் வாய்வழி உணவு உட்கொள்வதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஓரிரு நாளில் மருத்துவமனையில் இருந்து பிரதமரின் தாயார் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.