அரசியல் பிரமுகரை கொலை செய்ய திட்டம்..பிரபல ரவுடி அப்பளம் ராஜா அதிரடி கைது
சென்னையை அடுத்த ஒரகடம் அருகே, அரசியல் கட்சி பிரமுகரை கொலை செய்ய திட்டம் தீட்டிய பிரபல ரவுடி உட்பட 5 பேரை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.அரசியல் பிரமுகரை கொலை செய்ய திட்டம்..பிரபல ரவுடி அப்பளம் ராஜா அதிரடி கைது
மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி அப்பளம் ராஜா என்கிற ராஜா, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, அரசியல் கட்சி முக்கிய பிரமுகர் ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டுவதாக போலீசாரக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இந்த கும்பலை தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில், அப்பளம் ராஜா, கீழ்படப்பை பகுதியில் கூட்டாளிகளுடன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, அங்கு விரைந்த போலீசார், அப்பளம் ராஜா அவரது கூட்டாளிகளான தியாகராஜன், சுரேஷ்குமார், சிவகுமார், மைனர் செல்வம் ஆகிய 5 பேரை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் ஆலையில், ஸ்கிராப் எனப்படும் இரும்புக் கழிவுகளை ஒப்பந்தம் எடுப்பதில், அரசியல் கட்சி பிரமுகர் ஒருவருடன் முன்விரோதம் இருந்து வந்ததும், அவரை கொலை செய்ய திட்டமிட்டு இருந்ததும் உறுதிப்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 5 பேர் மீதும் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.