ராஜஸ்தானில் மீண்டும் பைலட் Vs கெலாட் -காங்கிரஸ் ஆட்சி தப்பிக்குமா?

Update: 2023-06-08 00:36 GMT

ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் புதிய கட்சி தொடங்க இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியில் நடப்பது என்ன என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக்கெலாட்டுக் கும், துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டுக்கும் இடையே நடந்துவரும் பணிப்போர் உச்சகட்டத்த எட்டியுள்ளது.

இந்நிலையில், ஜூன் 11 ஆம் தேதி, மறைந்த தனது தந்தையின் 23வது ஆண்டு நினைவு நாள் அன்று, புதிய கட்சியை தொடங்க ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

2018ஆம் ஆண்டு ராஜஸ்தான் காங்கிரஸ் மாநில தலைவராக இருந்த சச்சின் பைலட்... தனக்கு முதல்வர் பதவி கொடுக்கப்படாததால்..ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேருடன் ஹரியானாவில் உள்ள ரிசாட்டில் தங்கி... சொந்த கட்சிக்கு எதிராக போர் கொடி தூக்கினார். பின்னர் கட்சி மேலிட சமரசத்தால் மீண்டும் கட்சிக்கு திரும்பினார்.

ஆனாலும் முதல்வர் கெலாட்டுக்கும், பைலட்டுக்குமான மோதல் வெளிப்படையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. சச்சின் பைலட் சொந்தக்கட்சிக்கு எதிராக தொடர்ந்து போர்க்கொடி தூக்கிவருகிறது.

வசுந்தரா ராஜே தலைமையிலான கடந்த பாஜக ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து விசாரிக்கவில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து... சொந்தக் கட்சிக்கு எதிராகவே உண்ணாவிரதம் மற்றும் நடை பயணத்தை நடத்தி ஏப்ரல் மாதம் புது கலக்கத்தை ஏற்படுத்தி யிருந்தார், சச்சின் பைலட்.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் மைஹர் நகரில் உள்ள மா ஷார்தா கோயிலுக்கு காங்கிரஸ் எம்பி விவேக் டன்ஹாவுடன் சச்சின் பைலட் சென்று இருந்தது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தது.

தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும்... ஒரு காலத்தில் மாநில அளவில் பல்வேறு புதிய கட்சிகள் உருவாக சட்டப்பூர்வ ஆலோசகராக செயல்பட்டு வந்தவர் விவேக் என்பதால்... சச்சின் பைலட் புதிய கட்சி தொடங்க இருக்கிறார், என்ற யூகங்கள் வெளியாக தொடங்கின.

உடனே காங்கிரஸ் மூத்த தலைவர் வேணுகோபால் முன்னிலையில் பைலட் மற்றும் கெலாட்டிற்கு இடையே சமரசம் செய்து வைத்தது, காங்கிரஸ் மேலிடம். இருவரும் சிரித்தவாறு ஒன்றாக நிற்கும் புகைப்படமும் வெளியானது.

ஆனால், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையின் பேரிலேயே காங்கிரஸிலிருந்து விலகி தனி கட்சி தொடங்க சச்சின் திட்டமிட்டு இருப்பதாகவும், தன்னை ஊழலுக்கு எதிரானவன் என்பதை காட்டிக் கொள்வதற்காக வே சொந்த கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக வும் தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.

இன்னொரு புறம் தற்போது அமெரிக்கா சென்று உள்ள ராகுல் காந்தி ஜூன் 12-ம் தேதி தான் இந்தியா திரும்புவார் என்ப தாலும், சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி தற்போது அமெரிக்காவில் இருப்பதாலும், இந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து சச்சின் பைலட் விலக வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

மத்திய பிரதேசத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், மறைந்த தனது தந்தையின் பிறந்த நாள் தினத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்து... காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணமானார், ஜோதிராதித்ய சிந்தியா.

அவருக்கு ஆதரவாக 22 எம்எல்ஏக்கள் தங்களின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால் மத்திய பிரதேசத்தில் கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, தாமரை மலர்ந்தது குறிப்பிடத்தக்கது.



Tags:    

மேலும் செய்திகள்