சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையத்தில்அமைச்சர்கள் எம்ஆர்கே பன்னீர்செல்வம், ராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு 14 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர்கள் அது குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிருந்தனர். பிச்சாவரம் சுற்றுலா மையத்தை அழகுபடுத்தி சீரமைக்கும் திட்டத்திற்கான வரைபடத்தை அமைச்சர்கள் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்கள் பிச்சாவரத்திற்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவதாகவும் அங்கு நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் 10 மாதத்தில் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவித்தனர்.