"ஆஸி. மக்கள், பிரதமர் அந்தோணி ஆல்பனீசுக்கு நன்றி.." - பிரதமர் மோடி போட்ட ட்வீட்
ஆஸ்திரேலிய மக்களுக்கும், ஆஸ்திரேலிய அரசுக்கும், அந்நாட்டு பிரதமரும், தனது நண்பருமான அந்தோணி ஆல்பனீசுக்கும் நன்றி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு அரசுமுறை பயணமாக சென்ற பிரதமர் மோடி இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து அந்தோணி அல்பனீசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, உலகளாவிய நன்மைக்காகவும், இந்தியா-ஆஸ்திரேலியா நட்புறவை வலுப்படுத்தும் வகையிலும் தொடர்ந்து பணியாற்றுவோம் என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆல்பனீசுடனான ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை, பெரு நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளுடனான சந்திப்பு ஆகியன நட்புறவை மேலும் மேம்படுத்தும் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.