பிரிட்டன் இளவரசரையும் மனைவியையும் காரில் விரட்டி சென்ற நபர்கள்..2 மணி நேரமாக நடந்த திக் திக் சேசிங்

Update: 2023-05-18 10:07 GMT

அமெரிக்காவில், பிரிட்டன் இளவரசர் ஹாரியும் அவருடைய மனைவியும் காரில் பயணம் செய்தபோது, புகைப்படக்காரர்கள் படமெடுக்க நீண்ட நேரம் பின்தொடர்ந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நியூயார்க் நகரில் நேற்றிரவு நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, ஹாரியும், அவருடைய மனைவி மேகன், மேகனின் தாயார் ஆகிய மூவரும் காரில் வீடு திரும்பினார்கள். அப்போது, அவர்களை சூழ்ந்து கொண்ட புகைப்படக்காரர்கள் காரில் பின்தொடர்ந்து வந்தனர். போக்குவரத்து சிக்னல் எதையும் மதிக்காமல் அவர்கள் சூழ்ந்து கொண்டு வந்ததால் மிகப்பெரிய விபத்து ஏற்படும் சூழல் உருவாகி பதற்றம் நிலவியது. மேலும், சிறு சிறு விபத்துகளும் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து, ஹாரியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பிரபலங்கள் பொது நலனுக்காக வெளியில் வரும்போது, யாருடைய பாதுகாப்புக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இளவரசி டயானா சம்பவம் போலவே, புகைப்படக்காரர்கள் பின் தொடர்ந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்