துள்ளி குதித்த மீன்களை கண்மாயில் இறங்கி அள்ளிச்சென்ற மக்கள்.. விமரிசையாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கன்னியாபுரம் மந்தைகுளம் கண்மாயில் மீன்பிடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் கன்னியாபுரத்தை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு கூடை, கச்சாவலை உள்ளிட்டவைகள் மூலம் கண்மாயில் இறங்கி மீன்களை பிடித்தனர்