விடிய விடிய கால்நடைகளுடன் அரசு ஆபிஸை முற்றுகையிட்டு போராட்டம் | Erode | Govt Office
விடிய விடிய கால்நடைகளுடன் மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பரபரப்பு சம்பவம் ஈரோட்டில் நிகழ்ந்துள்ளது... ஊத்தங்காடு பகுதியில் செல்லும் பகுதியில் தார்சாலை அமைக்க குழி தோண்டி போடப்பட்டுள்ளதால், ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லவும், மக்கள் நடப்பதற்கும் பாதை இன்றி 5 கிலோ மீட்டர் சுற்றி செல்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து ஒப்பந்ததாரர்களிடம் நடப்பதற்கு பாதை அமைத்து கொடுக்குமாறு கேட்கப்பட்ட நிலையில், ஒப்பந்ததாரர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறி, ஆத்திரத்தில் மக்கள் ஆடு, மாடு, நாய்களுடன் பேரூராட்சி அலுவலகத்தில் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்ததாரர் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்ட பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.