அடகு கடைகளுக்கு அல்வா கொடுத்த பெண்கள்.. சுற்றிவளைத்த உரிமையாளர்கள் - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
- விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே, கும்பல் ஒன்று, போலி நகையை அடமானம் வைத்து மோசடி செய்யும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
- மரக்காணம் பகுதியில் உள்ள பல்வேறு நகை அடகு கடையில், கடந்த சில மாதங்களாக, கும்பல் ஒன்று, போலி நகையை அடகு வைத்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்து வந்தது.
- இந்த நிலையில், அனைத்து அடகு கடை உரிமையாளர்களும் உஷாரான நிலையில், பெண்கள் இருவர், நகையை அடகு வைக்க வந்தபோது, கடையின் உரிமையாளர் நகையை முழுமையாக பரிசோதனை செய்துள்ளார்.
- அப்போது அவை போலி என தெரியவந்தது. புகாரின் பேரில் வந்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.