பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் விவகாரம்... மத்திய அரசு நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ தகவல்
- பரந்தூர் விமான நிலையம் அமைக்க நான்காயிரத்து 791 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
- இது குறித்து திமுக எம்.பி. கிரி ராஜன், எழுப்பிய கேள்விக்கு, மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார்.
- அந்த பதிலில், டிட்கோ மற்றும் தமிழக அரசு இட அனுமதி வழங்க கோரி விண்ணப்பம் தாக்கல் செய்திருப்பதாக கூறியுள்ளார்.
- அந்த விண்ணப்பம் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துடன் கலந்து ஆலோசித்து மத்திய விமான போக்குவரத்து துறையின் பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
- டிட்கோ தாக்கல் செய்துள்ள இடம் அனுமதி விண்ணப்பத்தின் படி பரந்தூரில் விமான நிலையம் அமைக்க நான்காயிரத்து 791 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.