சசிகலாவுக்கு மாஃபா பாண்டியராஜன் பதில்

Update: 2023-03-26 03:15 GMT
  • அதிமுகவைச் சேர்ந்த 99 சதவீதத்தினர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் ஒருங்கிணைந்துள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.
  • விருதுநகரில் நடைபெற்ற சமபந்தி விழாவில் மாஃபா.பாண்டியராஜன், முன்னாள் மேயர் துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டு 5 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கினர்.
  • பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாஃபா. பாண்டியராஜன், 99 சதவீத அதிமுகவினர் ஈபிஎஸ் தலைமையில் ஒருங்கிணைந்து உள்ளதாகவும், சிதறியுள்ள ஒரு சிலரும் அதிமுகவில் இணைந்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.
  • எனவே, வேறு யாரும் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சசிகலாவுக்கு பதில் தரும் விதமாக கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்