பழனி தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி இரண்டாம் கால யாக பூஜை

Update: 2023-01-24 06:40 GMT


Full View

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் கும்பாபிஷேக விழா வரும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகள் நடைபெற உள்ளது.

இதையொட்டி இரண்டாம் கால யாக பூஜை நடந்து வருகிறது.

யாகசாலை பூஜையில் அமைக்கப்பட்டுள்ள 83 வேள்வி குண்டங்களில் 150 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வேள்விகள் நடத்துகின்றனர்.

யாக சாலையில் 108 மூலிகைகள் மற்றும் நவதானியங்கள் உள்ளிட்ட பூஜை பொருள்கள் பயன்படுத்தி வேள்விகள் நடத்தப்படுகிறது.

மேலும் 108 ஓதுவார்கள் திருமறை திருப்புகழ் பாடுகின்றனர்.

இன்று முதல் யாகசாலை பூஜையில் தனிநபர்கள் புனித நூல் கொண்டு வந்து கந்தபுராணம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், திருமுறை முற்றேதல், மறை ஓதுதல் உள்ளிட்ட பாடல்களை பாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் நவபாசன மூலவர் சிலையை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி நிறுத்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய யாகசாலை பூஜையில் சண்முகரின் ராஜா அலங்கார திருமேனி வைக்கப்பட்டுள்ளது. இதை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

மூலவர் நவபாசன முருகனை தரிசிக்க முடியாது என்பதால் இன்று மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே உள்ளது.

இந்நிலையில் மூன்றாம் கால யாக பூஜை இன்று மாலை நடைபெற உள்ளது.

தொடர்ந்து வரும் 27 ஆம் தேதி வரை எட்டு கால யாக பூஜைகள் நடைபெற உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்