சூப்பர் பவர் இருப்பதாக எண்ணிக் கொண்டு 4வது மாடியில் இருந்து இளைஞர் ஒருவர் குதித்ததாக வெளியான காட்சிகள், காட்டுத்தீ போல் சமூக வலைத்தளத்தில் பரவியது..
கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி அருகே, மைலேரிபாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், பிடெக் படித்து வந்தவர் 19 வயதான பிரபு.
கடந்த 28ம் தேதி மாலை வேளையில், கல்லூரி விடுதியின் 4வது மாடியில் இருந்து பிரபு கீழே குதிக்க, அவருக்கு கால் மற்றும் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டதுடன், தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளது..
உடனடியாக அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், தன்னிடம் சூப்பர் பவர் இருப்பதாக எண்ணி, மற்றொரு கட்டிடத்திற்கு குதிக்க முயன்றதாக தகவல் பரவியது..
ஆனால் தனது மகன் அப்படிப்பட்டவர் இல்லை என வேதனையுடன் கூறும் பிரபுவின் தாய், தவறான தகவல்களால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய உதவியும் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கிறார்...