இலங்கை துறைமுகத்தில்... பாகிஸ்தானின் ஏவுகணை தாங்கிய போர்க்கப்பல்
இலங்கை வர உள்ள பாகிஸ்தான் போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தில் 4 நாட்கள் நிற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஷாங்காய் நகரில், பாகிஸ்தானுக்காக ஏவுகணை தாங்கி போர்க்கப்பல் தயாரிக்கப்பட்டது. பிஎன்எஸ் தைமூர் என பெயரிடப்பட்ட இந்த கப்பல், கம்போடியா, மலேசியாவில் போர் பயிற்சியில் ஈடுபட்டது.
தொடர்ந்து, இலங்கை வழியாக பாகிஸ்தான் செல்லும் பிஎன்எஸ் தைமூர், கொழும்பு துறைமுகத்தில் நின்று செல்ல திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், வரும் 12ஆம் தேதியில் இருந்து 15ஆம் தேதி வரை கொழும்பு துறைமுகத்தில் நிற்க பிஎன்ஸ் தைமூர் போர்க்கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.