பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்க மத்திய அரசு முடிவு

Update: 2022-12-07 06:06 GMT

பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த 5-ஆம் தேதி டெல்லியில் தொடங்கியது. இதில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கான விசாவை மத்திய வெளியுறவுத்துறை நிராகரித்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பார்வையற்றோருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், விளையாட்டுடன் அரசியலை கலப்பதாக இந்தியா மீது குற்றம் சாட்டியது.

தற்போது இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பார்வையற்ற பாகிஸ்தான் அணியை சேர்ந்த 34 வீரர்களுக்கு விசா வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனால் இந்தியாவில் நடைபெறும் பார்வையற்றோருக்கான உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்