அம்மா உணவக ஊழியர்களுக்கு நோட்டீஸ் - மாநகராட்சி சொன்ன அதிர்ச்சி தகவல்

Update: 2022-11-18 10:16 GMT

கடலூர் அம்மா உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஓட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் அரசு மருத்துவமனை மற்றும் உழவர் சந்தையில் இரண்டு அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த இரண்டு அம்மா உணவகத்திலும் 16 பெண் ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், அனைவரையும் பணிநீக்கம் செய்து மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விடிய விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் வழக்கம்போல பணிக்கு வந்து, உணவகத்தில் சமைக்கும் பணியிலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் இரண்டு அம்மா உணவகத்திலும் மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டன. அதில், காலையில் சமைத்த உணவை மதியத்தில் வழங்கியதாகவும், 2018 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு அம்மா உணவகமும் மாநகராட்சி கருவூலத்தில் 3 ஆயிரத்து 600 செலுத்தி வந்த நிலையில் தற்போது வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே செலுத்தி மாநகராட்சிக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும், இதுகுறித்து விளக்கம் அளிக்காவிடில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்