சீர்காழியை உருகுலைத்த வடகிழக்கு பருவமழை - முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆய்வு | CM | M.K.Stalin

Update: 2022-11-14 02:42 GMT

மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று, மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்கிறார்.

வடகிழக்கு பருவமழை டெல்டா மாவட்டங்களில் வெளுத்து வாங்கியது. குறிப்பாக, மயிலாடுதுறையில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்தது. சீர்காழியில் அதிகபட்சமாக ஒரே நாளில் 44 சென்டி மீட்டர் மழை பதிவானது. திரும்பிய திசையெங்கும் வெள்ளக்காடாக காட்சியளித்த சீர்காழி தாலுகா, தனித்தீவு போல் மாறியது. 31 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின. குடியிருப்புகளும் மழைநீரால் சூழப்பட்டன. இந்நிலையில், பொதுமக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மழை பாதிப்புகளை சரிசெய்யும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்