நள்ளிரவில் Run Way-க்குள் புகுந்த வடமாநில இளைஞர் - மதுரை ஏர்போர்ட்டில் பரபரப்பு
நள்ளிரவில் மதுரை விமான நிலைய ஓடுதள பாதை சுற்றுச்சுவரை மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஏறி குதித்து சுற்றி திரிந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆய்வாளர் துருவேய் குமார் ராய் தலைமையில் உடனடியாக அந்த இளைஞரை சுற்றி வளைத்து அதிகாரிகள் அவனியாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த இளைஞர் யுகில் மார்டியின் மன நலன் பாதிக்கப்பட்ட 19 வயது மகன் கிலியன் மார்டி என்பது தெரிய வந்தது. அவருக்கு மனநலன் சரி இல்லாததால் வழக்கு பதியாமல் போலீசார் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.