பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு - நோபல் பரிசுக்குழுவின் துணை தலைவர் விருப்பம் | pmmodi
இந்திய பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசை வெல்வதற்கு தகுதியானவர் என நோபல் பரிசுக்குழுவின் துணைதலைவர் ஆஷ்லே டோஜே
தெரிவித்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா போரை பிரதமர் மோடியால் மட்டும் தான் நிறுத்த முடியும் என உலக நாடுகள் பலவும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில்,
அமைதிக்கான நோபல் பரிசுக்கான மிகப்பெரிய போட்டியாளராக பிரதமர் மோடி இருப்பதாக ஆஷ்லே டோஜே தெரிவித்துள்ளார். தன்னை மோடியின் மிக பெரிய ரசிகராக அறிமுகப்படுத்தி கொண்ட அவர்,
உலக நாடுகள் இந்தியாவிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அமைதியின் தூதராக பிரதமர் மோடி உதிர்த்த வார்த்தைகளை சுட்டிக்காட்டிய அவர், பிரதமர் மோடியின் கொள்கைகளால் இந்தியா பணக்கார நாடாக மாறி வருவதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்.