நம்ம என்ன பண்ணாலும் யாருக்கும் தெரியாதாம் - வாட்ஸ்அப்பின் அட்டகாசமான அப்டேட்
வாட்ஸ் அப் நிறுவனம் புதிதாக 3 வசதிகளை அறிமுகம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜூகர்பெர்க் வெளியிட்ட செய்தியில் " வாட்ஸ் அப்பில் 3 புதிய வசதிகள் அறிமுகப்படுத்துவதாகவும், இதன் மூலம் குழுவில் உள்ள ஒருவர் மற்றவர்களுக்கு எந்த அறிவிப்பும் தெரிவிக்காமலே குரூப்பிலிருந்து வெளியேறலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால், அவர்களின் தனிப்பட்ட உரிமைகள் பாதுகாக்கப்படும் என தெரிவித்துள்ள அவர், ஒருவர் ஆன்லைனில் இருக்கிறாரா என்பதை குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் மறைக்கும் வசதியும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.