நீலகிரி நிலச்சரிவு... பெரிய அளவில் ஆபத்து நிகழ வாய்ப்பு.. அதிகாரிகள் அதிரிச்சி தகவல்

Update: 2022-08-18 12:40 GMT

நீலகிரி மாவட்டம் கூடலூரில், நிலச்சரிவு தொடர்பான பாதிப்புகள் குறித்து, புவியியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கூடலூர் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில், 70 மீட்டர் தூரத்துக்கு நிலச்சரிவு ஏற்பட்டு, இரண்டு இன்ச் ஆழத்துக்கு சாலை இறங்கியது.

மேலும், மலைப்பகுதி அடிவாரத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகளில், பெரிய அளவிலான விரிசல் ஏற்பட்டதுடன், சில வீடுகள் மண்ணில் புதைந்தன.

இதனிடையே, புவியியல் துறை துணை இயக்குநர் சரவணன் தலைமையிலான அதிகாரிகள், சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர்.

இதில், அதிக கனமழை பெய்ததால், பூமிக்கு அடியில் மண்சரிவு ஏற்பட்டது தெரியவந்தது. இந்த பகுதியில் பெரிய அளவில் ஆபத்து நிகழ வாய்ப்பு இருப்பதாக குறிப்பட்ட அதிகாரிகள், தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு இறுதி அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்