மாரியம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 4 பெண்கள் - திடீர் மழையால் விபரீதம்

Update: 2022-12-13 02:30 GMT

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே பெண் பக்தர்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.சீகூர் வன பகுதியில் அமைந்துள்ள ஆனிக்கல் மாரியம்மன் கோயில், கார்த்திகை தீப திருவிழாவிற்காக திறக்கபட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில், பங்கேற்க ஊட்டி, கோத்தகிரி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சென்றிருந்தனர். ஆனிக்கல் ஆற்றை கடந்து பக்தர்கள் கோயிலுக்கு சென்ற நிலையில், திடீரென பெய்த கனமழையால் ஆற்றில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆற்றை கடக்க முயன்ற ஜெக்கலொரை கிராமத்தை சேர்ந்த சரோஜா, வாசுகி, விமலா மற்றும் சுசிலா என்ற 4 பெண் பக்தர்கள் எதிர்பாராத விதமாக ஆற்யில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனால், அதிர்ச்சி அடைந்த சக பக்தர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வன மற்றும் தீயணைப்பு துறையினர் அவர்களை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்