வெளியான நீட் தேர்வு முடிவுகள் - அதிர்ச்சியில் அரசு பள்ளி மாணவர்கள்
நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் தோல்வி அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தாண்டு நடந்த நீட் தேர்வில், 17 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் எழுதினர்.
தற்போது நீட் தேர்வு முடிவு வெளியான நிலையில், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் தோல்வி அடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
60 சதவீதத்திற்கும் மேலான மாணவர்கள் தோல்வி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
தேர்வில் வெற்றிப் பெற்ற மாணவர்களின் மதிப்பெண்களும் 300 முதல் 400 வரை என்ற அளவில் உள்ளதாகவும் அரசு பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா காரணமாக சரிவர நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படாதது முக்கிய காரணம் என்றும், மே மாதம் இறுதி வரை இழுத்தடித்து பொதுத்தேர்வு நடத்தியதால், நீட் தேர்வுக்கு தயாராகுவதில் சிக்கல் எழுந்ததாக தெரிவிக்கின்றனர்.
பொதுத்தேர்வு முடிந்து ஒரு மாதம் கால இடைவெளியில் நீட் தேர்வு நடத்தியதால், மாணவர்களுக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டதாகவும் அரசு பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.