"ஆளுநர் பேசியது சரியென்றால் அதனை அரசு ஏற்கலாம்.. " - நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி
12 மணி நேர வேலை மசோதாவை வாபஸ் பெற்றது தேவையில்லாத ஒன்று என தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுநர் பேசியது சரியானதாக இருந்தால் அதனை அரசு ஏற்றுக்கொள்ளலாம் எனவும் கூறினார்.