'அம்மை நோயை அம்பாள் தீர்ப்பாள்' உடுக்கை, சூலாயுதத்துடன் பூமியில் இருந்து அம்மன் சிலை மீட்பு விதவிதமான பொருட்களால் அம்மனுக்கு அபிஷேகம்

Update: 2023-02-10 09:10 GMT

அம்பிகையின் அருளை சொல்ல ஊரெங்கும் கோயில்கள் ஏராளம்... அப்படியாக திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் அருள்பாலிக்கிறாள் மாரியம்மன்...

பல நூறு வருடங்களுக்கு முன்பாக பூர்வீக பூமியை விட்டு வந்த லிங்கம நாயக்கர் ஒரு காட்டு பகுதியை மக்கள் வாழும் பூமியாக மாற்றி அதற்கு இரசை என்று பெயரிட்டாராம்... பின்னர் அங்கே சிற்றரசனாக பொறுப்பேற்று மக்களை வழிநடத்தி வந்தார்.

இவரின் அரண்மனைக்கு பால் கொண்டு வரும் பணியாள் சம்பவத்தன்று களைப்பாக இருக்கவே, மரத்தடியில் குடத்தை வைத்துவிட்டு ஓய்வெடுத்துள்ளார்.

பின்னர் எழுந்து பார்த்த போது குடத்தில் இருந்த பால் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். தொடர்ச்சியாக பல நாட்கள் இதுபோல் நடப்பதை அரண்மனையில் சொல்ல சிற்றரசரன் அதை சோதிக்க திட்டமிட்டார்.

பால் குடத்தை பணியாள் வைத்ததும் அதில் இருந்த பால் திடீரென மாயமானது கண்டு அதிர்ந்து போன அவர்கள், உடனே பூமியை தோண்டி பார்த்த போது ரத்தம் பீறிட்டு வந்திருக்கிறது. கூடவே கையில் சூலாயுதம், உடுக்கையோடு அம்மன் சிலையும் கிடைக்க அதை எடுத்து மாரியம்மனாக வைத்து பூஜித்து வந்ததாக கூறுகிறது வரலாறு...

கோயிலின் கருவறையில் தாயானவள் அன்ன வாகனத்தில் அசுரனை காலில் மிதித்த நிலையில் காட்சி தருகிறாள்..

இங்கு வந்து அம்மனின் சக்தி வாய்ந்த தீர்த்தத்தை பருகுவதால் 24 வகையான அம்மை நோய்கள் குணமாவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்...

மேலும் மஞ்சள் பொடியால் அபிஷேகம் செய்வதால் ராஜ ஆட்சி செய்வதற்கான பலன் கிடைப்பதாகவும்... அரிசிமாவு கொண்டு அபிஷேகம் செய்வதால் கடன் தொல்லைகள் நீங்குவதாகவும் கூறுகிறார்கள்..

அதேபோல மாதுளைச்சாறு கொண்டு அபிஷேகம் செய்வதால் -அரசியல் மற்றும் செய்யும் தொழிலில் வெற்றியும், கரும்புச்சாறால் அபிஷேகம் செய்வதால் உடல் ஆரோக்கியம் பெற்று ஆயுள்பலம் கூடுவதும் ஐதீகமாக பார்க்கப்படுகிறது...

பிரீத்...

மேலும் இங்குள்ள அம்மனை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்கிறார்கள்...

அவ்வாறு குழந்தை வரம் பெற்றவர்கள் மாசி மகத்தில் நடைபெறும் விழாவில் கரும்பை கொண்டு மரமாக அமைத்து அதில் புது புடவையில் தொட்டில் கட்டி தங்களது குழந்தைகளை படுக்க வைத்து அம்மனுக்கு நன்றி தெரிவிப்பது வழக்கம்..

அம்மனிடம் வேண்டுதல் முன்வைப்போர் அக்கினிசட்டி எடுத்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும், கழுமரம் ஏறியும், பூக்குழி இறங்கியும் தங்களது நேர்த்திக் கடன்களை செய்து வருகிறார்கள்...

கோயிலானது காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்...

திண்டுக்கல்லில் இருந்து 35 கிலோ மீட்டர் பயணித்தால் நத்தத்தில் உள்ள இந்த கோயிலை வந்தடையலாம்...

நோய்கள் பலவற்றை நீக்கி ஆரோக்கிய வாழ்வு அருளும் நத்தம் மாரியம்மனை நாமும் வணங்குவோம்... நலம் பெறுவோம்...

Tags:    

மேலும் செய்திகள்