- நிலவிற்கு மனிதனை அனுப்பி ஆய்வை செய்யும் ஆர்ட்டெமிஸ் 3 திட்டத்தை 2025 டிசம்பரில் நிறைவேற்ற திட்டமிட்டிருக்கும் நாசா, அதற்கான பணிகளை தீவிரமாக செய்து வருகிறது.
- இந்த திட்டத்தில் நிலவுக்கு அனுப்பப்படும் விண்வெளி வீரர்கள் ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனம் வழங்கும் ஸ்பேஸ்சூட்களை அணிவார்கள் என நாசா தெரிவித்துள்ளது.
- டெக்சாசில் நடைபெற்ற நிகழ்வில் அடர் சாம்பல் நிறை சீருடையை நாசா அறிமுகம் செய்தது. இந்த சீருடை விண்வெளியில் கடுமையான சூழலில் பணிபுரியும் வீரர்கள் பாதுகாப்பாக இருக்கவும், குளிர்ச்சியாக இருக்கவும் உதவும் என நாசா தெரிவித்துள்ளது.
- நிலவில் முதலில் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் அணிந்திருந்த பருமனான வெள்ளை நிற சீருடையை நாசா மாற்றியிருக்கிறது.
- அதேபோல், வீரர்களுக்கு வழங்கப்படும் புதிய ஹெல்மெட் மேம்பட்ட பார்வைநிலையை வழங்கும் எனவும், காலணிகள் சந்திரனின் தென் துருவத்திற்கு ஏற்ற வெப்பத்திலிருந்து காக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.