"அரசுக்கு உண்டியல் பணத்தை தர முடியாது" - அறநிலையத்துறை அதிகாரிகளுடன் பூசாரிகள் வாக்குவாதம்

Update: 2023-02-22 05:33 GMT
  • நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே அங்காளம்மன் கோயிலின் உண்டியல் பணத்தை தர முடியாது என அறநிலையத் துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
  • மறப்பறை கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி கோயில் உள்ளது.
  • இந்த கோயிலில் காலம் காலமாக அதே பகுதியை சேர்ந்த சிலர் பூசாரி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.
  • மாசி மாதம் நடக்கும் மயான கொள்ளை திருவிழாவின் நிறைவு நாளில் வழக்கமாக கோயில் உண்டியல் திறந்து எண்ணப்படுவது வழக்கம்.
  • அதன்படி நேற்று அறநிலையத்துறை அதிகாரிகள் உண்டியலை திறந்து காணிக்கைகளை எண்ண வந்தனர்.
  • அப்போது, கோயில் பரம்பரை பூசாரிகள் இந்த கோயில் தங்களுக்கு சொந்தமானது என கூறி, அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
  • போலீசார் அவர்களை தடுத்தி நிறுத்தி வெளியே அழைத்து சென்றனர்.
  • இதற்கிடையே, அதிகாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி, ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தம் என்பவரை ஊராட்சி தலைவர் பழனியப்பன் உள்ளிட்டோர் தாக்கியதாக கூறப்படுகிறது
Tags:    

மேலும் செய்திகள்