மழைக்கு கூட பள்ளி பக்கம் ஒதுங்காத நபருக்கு கிடைத்த அரசு பணி... 25 ஆண்டுக்கு பின் காத்திருந்த அதிர்ச்சி

Update: 2022-12-11 06:15 GMT

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே, போலி கல்வி சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்ததாக, கூட்டுறவு சங்க ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஆரியூரில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், அதே பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் அலுவலக உதவியாளராக 25 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். அவர் பணியில் சேரும்போது, 8-ம் வகுப்பு கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, அவர் போலி சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, அவரது சான்றிதழ்களை சரி பார்த்தபோது, அவை போலியானவை என்பதும், ஜெயராமன் பள்ளிக்கே செல்லவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்