ஜாமினில் வெளிவந்த நபர்.. வழக்கை வாபஸ் வாங்க சொல்லி தாக்குதல் - எஸ்.பி அலுவலகத்தில் முன் பெண் தர்ணா

Update: 2023-02-24 05:43 GMT
  • நாகர்கோவிலில் எஸ்பி அலுவலகத்தில் குடும்பத்துடன் பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.கன்னியாகுமரி மாவட்டம் வண்டிக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பினு
  • . இவரின் மூத்த மகளுக்கு அதே பகுதியை சேர்ந்த சுந்தரலிங்கம் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
  • இதனையடுத்து சிறுமியின் தாயார் பினு கொடுத்த புகாரின் பேரில் சுந்தரலிங்கம் போக்சோவில் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் வெளிவந்தார்.
  • இந்நிலையில் சுந்தரலிங்கம் தரப்பினர், வழக்கை வாபஸ் வாங்குமாறு பினுவின் குடும்பத்தினரை மிரட்டியும், தாக்கியும் வந்துள்ளனர்.
  • இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் பயனளிக்காத நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையை அணுகியுள்ளனர்.
  • நீதிமன்றம் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டும் போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
  • இந்நிலையில் பினு, நியாயம் கேட்டு தனது குடும்பத்துடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்