ஆட்டோவில் கடத்திய மர்ம நபர்.. ஸ்மார்ட்டாக யோசித்து தப்பிய மாணவன் - சென்னை சிக்னலில் பரபரப்பு

Update: 2022-10-27 06:50 GMT

சென்னையில், ஆட்டோவில் கடத்தப்பட்ட பள்ளி மாணவன், சமயோசிதமாக தப்பிச் சென்று, போலிசாரிடம் தஞ்சமடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னை கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்த அரவிந்த் சர்மா என்ற தொழிலதிபரின் 12 வயது மகன், கீழ்ப்பாக்கம் தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக, வழக்கமாக செல்லும் ஆட்டோவிற்காக சிறுவன் காத்திருந்துள்ளான். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், மாணவனை தாக்கி, ஆட்டோவில் கடத்திச் சென்றுள்ளார். பச்சையப்பன் கல்லூரி சிக்னலில் ஆட்டோ நின்றபோது, சமயோசிதமாக சிந்தித்த மாணவன், அங்கிருந்து தப்பிச்சென்று, பச்சையப்பன் கல்லூரி மெட்ரோ ஸ்டேசனில் நுழைந்துள்ளான். பின்னர் அங்கிருந்த போலிஸிடம் செல்போன் பெற்று, தனது உறவினருக்கு சிறுவன் தகவல் தெரிவித்துள்ளான். பின்னர் சென்ட்ரல் ரயில் நிலைய போலீசாரிடம் மாணவன் ஒப்படைக்கப்பட்ட நிலையில், குடும்பத்தார் மீட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், பள்ளி மாணவனை கடத்திய மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்