- விழுப்புரம் மாவட்டம், அகூர் கிராமத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் சம்பத்துக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டது தொடர்பாக இரு தரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி செல்வம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில், 100 நாள் வேலைத் திட்டத்தில் லஞ்சம், விவசாய நிலங்கள் அபகரிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன.
- இதுதொடர்பாக, இரு தரப்பைச் சேர்ந்த கிராம மக்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- சமாதானம் செய்யச் சென்ற போலீசார் முன்னிலையில் அவர்கள் கை கலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.