பொருநை அருங்காட்சியக கட்டுமான பணிகள்... முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்

Update: 2023-05-18 04:02 GMT

பொருநை நாகரிகத்தின் வாழ்வியலை அடிப்படையாக கொண்டு விளங்கும் தாமிரபரணி நதிக்கரையில், ஆதிச்சநல்லூா், கொற்கை, சிவகளை உள்ளிட்ட இடங்களில் மேற்கொண்ட அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களைக் காட்சிப்படுத்த உலகத்தரத்திலான பொருநை அருங்காட்சியம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். 33 கோடியே 2 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அருங்காட்சியகம் கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, பொதுப்பணித்துறை மூலம் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்நிலையில் அருங்காட்சியக கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், இன்று காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார். 13 ஏக்கர் பரப்பளவில் அமையும் இந்த அருங்காட்சியகத்தில், அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாழிகள், வளையல்கள், சுடுமண் பொம்மைகள், இரும்பு, தாமிரம் உள்ளிட்ட உலோகப் பொருட்கள், நாணயங்கள், பலவகை பானை ஓடுகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்