தீவிர புயலாக வலுவடைந்த 'மோக்கா' - எப்போது கரையை கடக்கிறது..?

Update: 2023-05-12 02:28 GMT

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மோக்கா புயல், நேற்று மாலை 5.30 மணியளவில் தீவிர புயலாக வலுவடைந்தது.

இந்தப் புயல், போர்ட்பிளேருக்கு மேற்கே 520 கிலோ மீட்டர் தொலைவிலும், காக்ஸ் பஜாரின் தென்மேற்கில் ஆயிரத்து 100 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டு உள்ளது. இன்று படிப்படியாக கடுமையான தீவிர புயலாக மாறி வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. அதன் பின்னர், வரும் 14-ஆம் தேதி காக்ஸ் பஜார், தென்கிழக்கு வங்காளதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரைகளை புயல் கடக்க வாய்ப்புள்ளது. கரையை கடக்கும்போது கடுமையான புயலாகவும், காற்றின் வேகம் 150 முதல் 160 கிலோமீட்டர் வரை இருக்கும் என்றும், இடையே 175 கிலோ மீட்டர் வேகத்தில் கூட காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்