விண்வெளியில் விளைவிக்கப்பட்ட தக்காளி பிரத்யேக விண்கலம் வாயிலாக பூமிக்கு கொண்டுவரப்படுகிறது என நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஆய்வுக் கூடத்தில் நாசா விஞ்ஞானிகள், குட்டைரக தாக்காளி விதைகளை விதைத்து செடியாக வளர்த்துள்ளனர். 100 நாட்களுக்கு மேலாக தக்காளி செடிகளை பராமரித்துவந்த விஞ்ஞானிகள், செடிகளில் கிடைத்த தக்காளி பழங்களை பதப்படுத்தி பூமிக்கு அனுப்பியுள்ளனர். பிரத்யேக விண்கலம் வாயிலாக அனுப்பப்பட்டுள்ள தக்காளியை பதப்படுத்தி, அதிலிருக்கும் ஊட்டச்சத்து குறித்து விரிவான ஆய்வை விஞ்ஞானிகள் மேற்கொள்ள உள்ளனர். இந்த அய்வு வாயிலாக வரும் காலங்களில் நீண்டகால விண்வெளி பயணத்தை விஞ்ஞானிகள் மேற்கொள்ளும் போது அவர்களுக்கு இயற்கை உணவு கிடைக்க இந்த ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.