நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படம், சிறப்பாக உள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டியுள்ளார். நடிகர் சிவகார்த்தியேன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படம், நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தநிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாவீரன் திரைப்படம் சிறப்பாக உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மாவீரன் என படத்தின் பெயரை குறிப்பிட்டு, தம்ஸ் அப் (thumbs up) எமோஜிக்களை அவர் பதிவிட்டுள்ளார்.