பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி... உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்... "குடும்பவிழா போன்று திமுக பிரசாரம்"
ஈரோடு கிழக்கு தொகுதி வீரப்பன்சத்திரம் பகுதியில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவரை வரவேற்பதற்காக பத்துக்கும் மேற்பட்ட தெருக்களில் கோலங்கள், வண்ணபலூன்களால் அலங்காரம் மற்றும் மலர்கள் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஒவ்வொரு வீதிகளிலும் கைச்சின்னம்,உதயசூரியன் வண்ணமலர்கள் உள்ளிட்ட கோலங்கள் இடப்பட்டிருந்தது.
அமைச்சர் செந்தில்பாலாஜி பிரச்சாரம் மேற்கொண்ட சாலை முழுவதும் சாணி பவுடரால் மஞ்சள் வண்ணம் தீட்டப்பட்டிருந்தது.
குடும்பவிழா போன்று திமுக பிரசாரம் அமைந்திருந்தாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.