நாளை அமைச்சராக டி.ஆர்.பி. ராஜா பதவியேற்க உள்ள நிலையில், அவர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், தன்னை வளர்த்து ஆளாக்கிய நவீன தமிழகத்தின் சிற்பியான கலைஞருக்கும், தங்கள் குடும்ப தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆருயிர் சகோதரர் உதயநிதிக்கும் மனமார்ந்த நன்றி என கூறியுள்ளார்