நள்ளிரவு பூஜை... புதையல் தேடியவருக்கு நேர்ந்த விபரீதம்... தெளித்த ரத்தம், சிதறிய குங்குமம்
ஓசூர் அருகே புதையல் தோண்ட பூஜை செய்ததாக கூறப்படும் நபர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் என்ற விவசாயி, தனது வீட்டின் அருகே உள்ள வெற்றிலை தோட்டத்தில் புதையல் எடுப்பதற்காக குழி தோண்டி, கோழியின் ரத்தம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்டவற்றை கொண்டு பூஜை செய்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பூஜை செய்த சிறிது நேரத்திலேயே, லட்சுமணன் அதே இடத்தில் இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணாஇ நடத்தி வருகின்றனர்.