நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பாஜக தலைமை அழைப்பு விடுத்துள்ளது .
ஜூன் 11ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா, பொதுச் செயலாளர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் கட்சிப் பொறுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பது குறித்து உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், அனைத்து பாஜக முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் பிரதமரை சந்தித்து பேசுவார்கள் என கூறப்படுகிறது. இதற்கிடையே, வருகிற 11ஆம் தேதியன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் அமித்ஷா உரையாற்றுகிறார். எனவே, பாஜக முதல்வர்கள் கூட்டம் அன்றைய தினம் மாலையில் என தெரிகிறது.