"கேஷ் இல்லைன்னா G Pay'ல அனுப்பு".. கத்தியை காட்டி வழிப்பறி..!அம்மன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்

Update: 2023-02-25 14:41 GMT
  • மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தவரிடம் கத்தியை காட்டி ஜீபே மூலம் பணம் பறித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
  • வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் அருண்குமார்.
  • இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக மதுரை வந்து விடுதியில் தங்கியுள்ளார்.
  • அப்போது, இரவு 11 மணியளவில் விடுதி வெளியே நின்றுகொண்டிருந்த அருண்குமாரை, மர்மநபர் ஒருவர் பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டியிருக்கிறார்.
  • இதில், பணம் இல்லை என கூறிய அருண்குமாரிடம் இருந்து ஜிபே மூலம் சுமார் 15 ஆயிரம் ரூபாயை பெற்று மர்மநபர் தப்பியோடிய நிலையில், புகாரின் அடிப்படையில் மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்