மாநகராட்சி வாகனங்களில் மருத்துவக் கழிவுகள் - தனியார் மருத்துவமனையின் அலட்சியம் - வெளியான வீடியோ

Update: 2023-04-16 16:16 GMT
  • மருத்துவ கழிவு மேலாண்மை விதிகளின்படி, அனைத்து மருத்துவமனைகளின் மருத்துவக் கழிவுகளை முறையாக பிரித்து சேமித்து பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையத்திடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். இந்நிலையில், சென்னை சூளைமேடு பஜனை கோயில் தெருவில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகளை, சட்ட விரோதமாக மாநகராட்சி குப்பை சேகரிப்பு வாகனங்களில் கொண்டு செல்லப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. மருத்துவக் கழிவுகளால் சூழலியல் பிரச்சனைகள் மட்டுமின்றி, எண்ணற்ற நோய்கள் பரவக்கூடிய அபாயம் ஏற்படும் என புகார் எழுந்துள்ளது. விதிமுறைகளை மீறி செயல்படும் இது போன்ற மருத்துவமனைகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்