- கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி மாணவிகள் உயிரிழந்த விவகாரத்தில், பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்த மாணவிகள் 4 பேர், மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
- இந்தநிலையில் மாணவிகளை ஆற்றுக்கு அழைத்து சென்ற அப்பள்ளியின் இடைநிலை ஆசிரியர் ஜெப சகேயு இப்ராஹிமை, போலீசார் கைது செய்தனர்.
- நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.