மிரட்டும் 'மாண்டஸ்' புயல் - மாநில அரசுகளுக்கு கைகொடுத்த மத்திய அரசு

Update: 2022-12-07 03:16 GMT

மாண்டஸ் புயல் எதிரொலியாக தமிழகத்தில் வருகிற 9-ம் தேதி பல்வேறு மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் டெல்லியில் தேசிய பேரிடர் மேலாண்மை குழு கூட்டம் மத்திய அமைச்சரவைச்செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மாநில அரசுகளுக்கு தேவையான உதவியை மத்திய அரசு முழுமையாக வழங்கும் என மத்திய அமைச்சரவைச்செயலாளர் ராஜீவ் கவுபா உறுதி அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்