தீவிர புயலாக சென்னைக்கு அருகே மெல்ல நகர்ந்து வரும் மாண்டஸ்!

Update: 2022-12-09 02:25 GMT

சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் தீவிர புயல், நிலை கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல், தீவிர புயலாக நேற்று இரவு வலுப்பெற்றது.

தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 350 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் மையம் கொண்டுள்ளதாகவும், இன்று அதிகாலை முதல் படிப்படியாக நகர்ந்து மீண்டும் புயலாக சற்று வலுவிழக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த புயலானது வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரையை நோக்கி நகரும் என்றும், புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே, மாமல்லபுரம் அருகே இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை 2.30 மணிக்குள், கரையை கடக்கக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால் தமிழகம், புதுச்சேரியில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்