2வது திருமணம் செய்து கொண்ட மனைவி - விபரீத முடிவெடுத்த கணவன் - திருப்பத்தூரில் பரபரப்பு
மனைவி 2வது திருமணம் செய்து கொண்டதால் முதல் கணவர் விஷம் குடித்த சம்பவம் திருப்பத்தூர் அருகே அரங்கேறியுள்ளது.
திருப்பத்தூரை அடுத்த அணேரி பகுதியைச் சேர்ந்த மூர்த்தி- சுதா தம்பதிக்கு 12 ஆண்டுகளாக குழந்தையில்லை என கூறப்படுகிறது.
3 ஆண்டுகளுக்கு முன் சுதா வீட்டை விட்டு வெளியேறி அவருடைய தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் 6 மாதத்திற்கு முன் மூர்த்திக்கு தெரியாமல் கார்த்தி என்பவரை சுதா இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
இதனை அறிந்த மூர்த்தி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆபத்தான நிலையில் இருந்த மூர்த்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.