"காங்கிரஸ் ஆட்சி செய்யாமல் இருந்திருந்தால்.." - மல்லிகார்ஜுன கார்கேவின் பரபரப்பு கருத்து
காங்கிரஸ் கட்சி மட்டும் 70 ஆண்டுகள் ஆட்சி செய்யாமல் இருந்திருந்தால், இந்தியா ஜனநாயகத்தை பார்த்திருக்கவே முடியாது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். குஜராத்தில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது என பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் கேள்வி எழுப்புவதாகவும், காங்கிரஸ் மட்டும் இந்தியாவை ஆட்சி செய்யாமல் இருந்திருந்தால், இந்தியா ஜனநாகத்தை பார்த்திருக்க முடியாது எனவும் தெரிவித்தார்.