மேக்கப்பால் மணப்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் - கல்யாணத்தை நிறுத்திய மணமகன் | Karnataka | Bride

Update: 2023-03-05 09:51 GMT

திருமணத்திற்குத் தயாரான மணப்பெண் அழகு நிலையம் சென்று மேக்கப் போட்ட போது முகத்தில் தீக்காயம் ஏற்பட்டதால், மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது...

அரசிகெரே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு 2 தினங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், அழகு நிலையம் சென்றுள்ளார்... அழகு நிலைய உரிமையாளர் கங்கா, புதிய வகை மேக்கப் செய்வதாகக் கூறி, கிரீமைத் தடவி 'ஸ்டீம்' க்ளீன் செய்துள்ளார்... உடனே அப்பெண்ணின் முகம் முழுவதும் கொப்புளங்கள் ஏற்பட்டு விகாரமாகியுள்ளது... உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள மணமகன் மறுத்து விட்டார். இதனால் திருமணம் நின்று போனது... புகாரின் பேரில் அழகு நிலைய உரிமையாளர் கங்கா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்