- இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே தனது குடும்பத்தினருடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள வீடியோ சமூக வலைத்தலங்களில் பரவி வருகிறது.
- இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் மூன்று வேளை உணவுக்கு கூட வழியில்லாமல் தவித்து வருகின்றனர்.
- தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு நெருங்கும் நிலையில், அதை கொண்டாட முடியாத அளவுக்கு வறுமை அங்கே தலைவிரித்தாடுகிறது.
- இந்த நிலையில்தான் இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தனது குடும்பத்தினருடன் அமர்ந்து புத்தாண்டு பலகாரம் செய்து மகிழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
- இந்த வீடியோவில் மஹிந்த ராஜபக்சேயின் மனைவி ஷிராந்தி ராஜபக்சே பலகாரங்கள் செய்ய, அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சே அதை சுவைத்துக் கொண்டிருக்கிறார்.
- மஹிந்த ராஜபக்சேவின் மாளிகையில் ஒரு பகுதியிலேயே இந்தக் காட்சி அரங்கேறியதாக கூறப்படுகிறது.
- நாடே துயரத்தில் இருக்கும் போது இவர் மட்டும் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்ற ரீதியிலேயே இலங்கை மக்கள் இதனைப் பகிர்ந்து வருகின்றனர்.
- ஆனால், தமிழகத்தில் சிலர் மிகச் சாதாரணமாக தோற்றமளிக்கும் இந்த அறையைப் பார்த்து, மகிந்த ராஜபக்சே... தான் செய்த தவறுகளுக்கெல்லாம் சேர்த்து தற்போது கஷ்டப்படுவதாக குறிப்பிட்டு பகிர்ந்து வருகிறார்கள்.